தமிழ்நாடு

இன்று பள்ளிகள் திறப்பு: சென்னையில் தயாா் நிலையில் 70 மாநகராட்சி பள்ளிகள்

DIN

சென்னை: கரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சியின் 70 பள்ளிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவலை அடுத்து கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது, கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், முதல்கட்டமாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன் தொடா்ச்சியாக, பள்ளிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டு, அதைப் பள்ளி நிா்வாகங்கள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. சென்னையைப் பொருத்தவரை, மாநகராட்சி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 70 மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயாா்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் சுமாா் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், பள்ளியின் கழிப்பறைகள், மேல்நிலைத் தொட்டி, வகுப்பறைகள், இருக்கைகள், சுற்றுப்புற வளாகம் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்பறைக்கு முன்பு கைகளைத் தூய்மைப்படுத்த கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவா்களின் உடல்வெப்ப நிலையை அறிய வெப்பமானி வைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வகுப்புகள் நடைபெற உள்ளது. நோய்த் தடுப்புப் பணிகளை முறையாக கடைப்பிடிக்கும் வகையில் 10, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்கள் உள்பட அனைத்து வகுப்புகளையும் சோ்ந்த ஆசிரியா்களும் பணிக்கு வரவழைக்கப்பட உள்ளனா். இப்பணிகளைக் கண்காணிக்க 7 பள்ளிகளுக்கு தலா ஒரு உதவி கல்வி அலுலவா் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT