தமிழ்நாடு

கோவையில் கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு

DIN

பள்ளி திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் கீழ் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு காலை 7.30 மணியில் இருந்தே மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கினர். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 653 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12 வகுப்பு படித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்தார். மேலும் 25 பறக்கும்படை அமைப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் செயல்பாடு மற்றும் மாணவர்கள் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின. வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காலை எட்டு மணியிலிருந்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டங்கள் வாயிலாக சமூக விதிகளை பின்பற்றி மாணவிகள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் கிருமிநாசினி, முகக்கவசம் அணிவது குறித்து ஆசிரியர்கள் உறுதி செய்த பின்பே மாணவிகளும் ஆசிரியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்புக்கு 25 பேர் வீதம் 30-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகுப்புகள் எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடம் கற்க ஆவலுடன் இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT