தமிழ்நாடு

சசிகலா வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும்: மு.க.ஸ்டாலின்

DIN

நாமக்கல்: பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது மக்கள் நலனுக்காக அல்ல, சசிகலா வெளியே வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் தான் என குமாரபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாகரை ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.  ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை. குமாரபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.தங்கமணி இத்தொகுதிக்கு தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறார்.  மூத்த அமைச்சராவார். 

மின்வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அது தொடர்பாக ஆளுநரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அந்த நகல் சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை. இதிலிருந்து உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். நீட் தேர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், ஏற்கவில்லை. ஆனால்‌ தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி நீட் தேர்வை ஆதரித்து விட்டார். இத்தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியும் பலனில்லை.  திமுக ஆட்சிக்கு வந்ததும் குமாரபாளையம் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் சாய ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்படும். 

முதல்வர் தில்லிக்கு சென்ற பயணம் விவசாய பிரச்னைகளை தீர்ப்பதற்காக அல்ல, வரும் 27ம் தேதி சசிகலா வெளியே வரும்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால்  தான் முதல்வர் அங்கு சென்றுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT