தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் செவ்வாடை பக்தர்கள் 700 பேர் மாலையணிவிப்பு

19th Jan 2021 04:24 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், 36ஆம் ஆண்டாக,700 பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு மாலை அணிந்தனர். 

லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி  வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வதற்காக 36 ஆம் ஆண்டு இருமுடி சக்திமாலையை 700 பக்தர்கள் அணிந்து கொண்டனர். 

இதற்கான நிகழ்வு, வழிப்பாட்டு மன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. செவ்வாடை அணிந்த ஆண்களும், பெண்களும் கூட்டு வழிபாடு நடத்தினர். கூட்டு வழிப்பாட்டில், கரோனா  தொற்றிலிருந்து கூத்தாநல்லூர், தமிழகம், இந்திய மற்றும் உலக மக்கள் முழுமையாக விடுபட்டு, குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

ADVERTISEMENT

அதன் பிறகு, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, அதங்குடி, புளியங்குடி, பனங்காட்டாங்குடி, சேகரை, வாழாச்சேரி, வடபாதிமங்கலம், மன்னார்குடி, பைங்கா நாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் 700 பேருக்கு மாலையணிவிக்கப்பட்டன. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மன்றத் தலைவர் எம்.சாம்பசிவம், செயலாளர் என். செல்வராஜ், பொருளாளர் ஏ.சண்முகம், உதவி தலைவர் சிவ.வரதராஜன், இணைச் செயலாளர் பி. செல்வி பாலசுப்பிரமணியன், பிரச்சாரக் குழு எம்.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.கேசவன், என்.கார்த்திகேயன், கே.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கவனித்தனர். 

இவர்கள் அனைவரும் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், 13 பேருந்துகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT