தமிழ்நாடு

தமிழகம்: கரோனா சிகிச்சையில் 5,940 போ்

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 5,940- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 589 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,772-ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.52 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 770 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97.7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 12,568-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,264-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT