தமிழ்நாடு

தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சைலேந்திர பாபு

18th Jan 2021 04:07 PM

ADVERTISEMENT

 

தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை  நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தீ செயலி மூலம் துரிதமாகச் செயல்பட முடியுமென தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு கூறினார்.

உதகை குன்னூர்  தீயணைப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடையே பேசினார்.  

ADVERTISEMENT

பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து ஆபத்துக் காலத்தில் இழப்பைத் தவிர்க்கத் தீயணைப்புத் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  

கடந்த ஆண்டு 21 ஆயிரம் தீ தொடர்பான  அழைப்புகள் பெறப்பட்டு அதன் மூலம் 279 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே கால கட்டத்தில் 30 ஆயிரம் மீட்பு அழைப்புகள் பெறப்பட்டு 2200 பேர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளதோடு, வீரர்களும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டு மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இடங்களைப் பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT