தமிழ்நாடு

விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி இறந்த இளைஞர் உடலை தேடும் பணி 3-வது நாளாக தொடர்கிறது

18th Jan 2021 12:13 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி இறந்த இளைஞர் உடலை தேடும் பணி மூன்றாம் நாளாக தொடர்ந்து வருகிறது.

விழுப்புரம் அருகே பிடாகம் தென்பெண்ணை ஆற்றில், மடப்பட்டு அருகே உள்ள சித்தானங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(25), சனிக்கிழமை ஆற்றில் குளித்தபோது அங்குள்ள தடுப்புக் கட்டையில் சிக்கி உயிரிழந்தார்.

தடுப்புக் கட்டையின் கம்பியில் சிக்கிக் கொண்ட அந்த இளைஞரின் உடலை மீட்கும் பணி 3 நாள்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். 

விழுப்புரம் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர், நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT