தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் சாலைப் பாதுகாப்பு வார விழா

18th Jan 2021 12:44 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் துறையும் இணைந்து, 32- ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா முத்துகடை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. 

விழாவையொட்டி, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியசைத்துத் துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். 

ADVERTISEMENT

இநில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத், ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் ஆய்வாளர் கே.டி.பூரணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், போக்குவரத்து ஆய்வாளர்கள் முருகேசன், செங்குட்டுவேலன் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி சங்க கூட்டமைப்பு சங்க தலைவர்  பார்த்தீபன், செயலாளார்  கோபால், நிர்வாகிகள் டோனியல், ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் காவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி சங்கத்தினர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடியும், கார்களில் சீட்பெல்ட் அணிந்தபடியும் ஊர்வலமாகச் சென்றனர்.
 

Tags : Ranipettai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT