தமிழ்நாடு

வலசக்கல் பட்டி ஏரியில் மூழ்கி இறந்த சிறுமியின் உடல் மீட்பு

DIN

தம்மம்பட்டி: கெங்கவல்லி  அருகே வலசக்கல் பட்டி ஏரி நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்த சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டது.

வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து உபரி நீர்  வெளியேறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த பைத்தூரைச் சேர்ந்த அண்ணாமலை (55) நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை நேற்று மாலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அதே பகுதியில் தனது பாட்டி சின்ன பாப்பாவுடன் நீச்சல் பழகிய கடம்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செந்திலின் மகள் தேவி (11), ஏரி நீர் கொட்டிய ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கி உயிரிழந்து விட்டார். அவரது உடல் ஞாயிறு இரவு வரை கிடைக்கவில்லை. திங்கள்கிழமை காலை கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் தேடி வந்தனர். பிற்பகல் 1 மணி அளவில் சிறுமியின் உடல் கிடைத்தது. உடல் கெங்கவல்லி காவல்துறையினரிடம் வழக்கு விசாரணைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT