தமிழ்நாடு

'ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம்'

DIN


சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT