தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் பவர் மேக்ஸ் ரப்பர் தொழிற்சாலையில் திங்களன்று நடைபெற்ற திடீர் தீ விபத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான ரப்பர் பொருள்கள், டயர்கள் எரிந்து நாசமாயின.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பவர் மேக்ஸ் தொழிற்சாலை 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாகன டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல தொழிற்சாலை ஊழியர்கள் 120 பேர் தொழிசாலையில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது 9 மணியளவில் மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் குவிக்கப்பட்டு இருந்த ரப்பர் பொருட்கள் மீது  தீபற்றியது. தீ பற்றியதை தொடர்ந்து அபாய சங்கிலி ஒலிக்கப்பட்டதை கேட்டும், தீ விபத்து என அறிந்தும் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.

 தொடர்ந்து மளமளவென பற்றிய தீ தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான டயர்களுக்கும் பரவியது. இதனால் கொழுந்து விட்டு எரிந்த தீ மற்றும் அதனால் உருவான கரும்புகை 10 கி.மீ. வரை தெரிந்தது. மேலும் தொழிற்சாலை கட்டடம் முழுக்க தீக்காடாய் காட்சி அளித்ததோடு மேற்கூரைகளும் சரிந்து விழத் தொடங்கியது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் சிப்காட், பொன்னேரி காவல் நிலையங்களை சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடியும் தீயை அணைக்க முடியாததால் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரும்புகையால் மூச்சுதிணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சம்பவ இடத்தில் சுகாதார துறையினரும் முகாமிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT