தமிழ்நாடு

மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்

எஸ். சித்தார்த்தன்

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் வயல்களில் தேங்கிய மழைநீரால் சேதமடைந்துள்ள பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால், மன்னார்குடி பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில், வளிமணடல் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 10 நாள்களாக பெய்துவந்த தொடர் மழையில் காரணமாக. மன்னார்குடி அடுத்துள்ள மண்ணுக்குமுண்டான், கர்ணாவூர், கிளார்வெளி, நொச்சியூர், ஏரிக்கரை பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா, தாளடி நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிச் சேதமடைந்தும், பயிர்கள் முளைக்கவும் தொடங்கியுள்ளதால் விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது.

தற்போது, மழை நின்றுள்ளதால் விவசாயிகள் பயிர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து கிடக்கும் நெல் கதிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளிலும், வயலிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, கிளார்வெளி ஏ.வீரையன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது, 

புரெவி, நிவர் புயலால் ஏற்பட்ட மழை பாதிப்புக்குப் பின், மத்தியக்குழு ஆய்வு செய்த பின் அறிவித்திருந்த நிவாரணத்தொகை மிகக் குறைவாகும். இதே போன்று, தனியார் காப்பீடு நிறுவனம் கள ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற பின்பு தான், இடைவெளி விடாமல் பத்து நாள்களுக்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. எனவே,பழைய கணக்கெடுப்பு மூலம் அரசு வழங்கும் நிவாரணம், காப்பீடு நிறுவனம் அறிவிக்கும் இழப்பீடு என்பது சரியான அளவுகோலாக அமையாது. 

எனவே,மீண்டும் மத்தியக்குழு வந்து பார்வையிடுவதும், காப்பீட்டு நிறுவனத்தினர் புதிய கணக்கெடுப்பினை எடுக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான பாதிப்பு கண்டறிய முடியும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT