தமிழ்நாடு

சேலத்தில் 13 கி.மீ. இடைநில்லா ஓட்டம்: உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி 

DIN


சேலம் : உலகிலேயே முதன்முறையாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்ட 8 வயது சிறுமி உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார். 

கோவிட் 19 விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் 3 ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி பிரதா, 13 கி.மீ தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். சிறுமியின் இந்த சாதனை ஓட்டத்தை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து துவங்கிய சாதனை ஒட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 13 கி.மீ தொலைவை 1.16 மணி நேரத்தில் சிறுமி கடந்தார். சிறுமியின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட்ஸ் அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டினர். 

உலக அளவில் 8 வயதில் 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டு உலக சாதனையாளர் புத்தகத்தில் ஒரு சிறுமி இடம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT