தமிழ்நாடு

கொண்டத்தூரில் 1000 ஏக்கர் சம்பா சாகுபடி மழைநீரில் மூழ்கி அழுகியது

DIN

சீர்காழி ஜனவரி 18 சீர்காழி அருகே ஒரு கிராமத்தில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதாலும், அறுவடைக்குத் தயாரான கதிர்கள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனை, உளுந்து பயிர் சாகுபடியும் இழந்ததால் மறுகணக்கெடுப்பு நடத்தவும் 100% காப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  தாலுக்கா கொண்டத்துரில்   ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் கடந்த 3 மாதங்களாக அடுத்தடுத்து பெய்த தொடர் கனமழையினால் நீரில் மூழ்கியது. விவசாயிகள் நடவு செய்து தை மாதம் அறுவடைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில் தற்போது தைமாதமும் வரலாறு காணாத அளவில் சீர்காழி தாலுக்காவில் கடந்த 12 நாள்களாக பெய்த கனமழையால் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

இப்பகுதியில் உள்ள அனைவரும் சிறு குறு விவசாயிகள்தான் தங்கள் நிலத்தில் விவசாயப் பணியை முடித்த பின்னர் விவசாய கூலி வேலைக்கும் செல்லும் நிலையில் உள்ளவர்களே அதிகம். மேலும் தற்போது தை மாதம் பொங்கலை ஒட்டி விவசாயிகள் அறுவடைக்குத் தயாரான நிலையிலும் மழை தொடர்ந்ததால் வயலில் மழைநீர் தேங்கி தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் வயலிலேயே மூழ்கி அழுகியது. பல இடங்களில் முற்றிய கதிர்கள் மீண்டும் முளைத்து விட்டது இதனால் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.

ஆர்வத்துடன் தை மாதம் அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதோடு வயலிலேயே மீண்டும் முளைத்து நாசமானதால் விவசாயிகள் கடும் வேதனையறிந்துள்ளனர். சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காலம் தவறியதால் உளுந்து பயிறு சாகுபடியும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு முழு விவசாயத்தையும் இழந்த நிலையில் அரசு மட்டுமே தங் காப்பாற்ற முடியும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வயலில் அழிந்து போன சம்பா பயிர்களை அகற்றவே நிவாரண தொகை போதாத நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் நிவாரணமும் முழு காப்பீடு வழங்கவும் கொண்டத்தூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT