தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: விடுபட்டோருக்கு நாளை முதல் விநியோகம்

DIN

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதோருக்கு, திங்கள்கிழமை (ஜன. 18) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசாக ரூ.2,500 மற்றும் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் உள்ள 2.07 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்திலுள்ள 2.02 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழு நீளக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கத் தொகை பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. இந்தத் தொகுப்புகள் அனைத்தும் துணிப்பையில் வைத்து அளிக்கப்பட்டன.

கடந்த 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. 12-ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. விடுபட்டோருக்கு 13-ஆம் தேதியன்று அளிக்கப்பட்டன.

2.02 கோடி அட்டைதாரா்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்பானது, இதுவரையில் சுமாா் 2.02 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொங்கல் தொகுப்பினை 5 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பெறாமல் உள்ளனா். அவா்களுக்கும் பரிசுத் தொகுப்பானது, திங்கள்கிழமை (ஜன. 18) முதல் ஜனவரி 25-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகுப்பினை இதுவரை பெறாதவா்கள், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT