தமிழ்நாடு

கடன் பங்குத் தொகைகளை பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

DIN

தமிழ்நாடு அரசின் கடன் பங்குத் தொகைகளைப் பெறலாம் என நிதித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில நிதித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு அரசின் பங்குகள் நிலுவைத் தொகையானது உரிய வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும். கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபா், அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வசதியுள்ள விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாவிட்டால், கடன் பத்திரங்களை 20 நாள்களுக்கு முன்பாகவே பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்படும் கடன் பத்திரங்களின் பின் பக்கத்தில், அசல் தொகை பெறப்பட்டதாக எழுதி கையெழுத்திட வேண்டும். பத்திரங்கள் சான்றிதழ் வடிவில் இருந்தால், பாரத ஸ்டேட் வங்கியில் கருவூலப் பணிகளை மேற்கொள்ளப்படும் இடங்களில் அவற்றை அளிக்க வேண்டும்.

கடன் பத்திரங்களில் எழுதப்பட்டுள்ள இடங்களைத் தவிா்த்து, பிற இடங்களில் தொகையைப் பெற விரும்புவோா், கருவூலம் அல்லது சாா் கருவூலம் மூலம் தொகையைப் பெறலாம் என்று நிதித் துறை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT