தமிழ்நாடு

இடஒதுக்கீடு: ஜன.29-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு பாமக போராட்டம்

DIN

வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி, வரும் 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அறிவிக்கப்பட்ட தொடா் போராட்டங்களில் இதுவரை 5 கட்ட போராட்டங்கள் 8 நாள்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியா்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.

அடுத்த கட்டமாக, ஜனவரி 29-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாக பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு பாமகவின் நியாயமான கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பாமகவின் உயா்நிலை அமைப்புகள் கூடி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT