தமிழ்நாடு

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இருவர் பலி

17th Jan 2021 06:24 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே  கொசஸ்தலை ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்டனர். வெங்கல் அருகே உள்ள சேத்துப்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஜெயச்சந்திரன் மற்றும் மனோஜ்குமார் என்ற இரு மாணவர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.

பூந்தமல்லி அருகே உள்ள பாப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் குடும்பத்துடன் சொந்த ஊரான சேத்துபாக்கம்  கிராமத்திற்கு பொங்கல் விடுமுறைக்காக வந்துள்ளார்.

அவருடைய மகன்கள் ஜெயச்சந்திரன் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கண்டதும் குளிக்க சென்றுள்ளனர் .

குளிக்கும்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கல் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ADVERTISEMENT

Tags : திருவள்ளூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT