தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் தேமுதிகவிற்கு நெருடல் இல்லை: எல்.கே.சுதீஷ்

17th Jan 2021 06:35 PM

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் தேமுதிகவிற்கு எந்த நெருடலும் இல்லை  என்று மணப்பாறையில் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர் இல்ல காதணி விழாவிற்கு கட்சியில் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை வந்திருந்தார்.

அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.எல்.கிருஷ்ணக்கோபால் தலைமையில் ஆண்டவர் கோயில் பகுதியில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்பகுதியில் மணப்பாறை ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் கல்வெட்டு திறக்கப்பட்டு, கட்சியின் கொடியினை சுதீஷ் ஏற்றி வைத்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு புறப்பட்ட சுதீஷை நூற்றுக்கணக்கானோர் இருச்சக்கர வாகனத்தில் பிரமாண்ட பேரணியாக நிகழ்விடம் வரை அழைத்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், கூட்டணியில் பாமகவிற்கு அளிக்கும் முக்கியத்துவம் தேமுதிகவிற்கு அளிப்பதில்லை என்று கட்சி தொண்டர்களின் மனநிலை இருப்பதாக தெரிகிறது என்ற கேள்விக்கு, பாமக கட்சியின் 20 சதவீத கோரிக்கைகளுக்கு தான் முக்கியத்துவம் அளித்து அதிமுகவினர் பேசினார்கள்.

அவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றும், பாமக கூட்டணியில் இருப்பது தங்களுக்கு எந்த நெருடலும் ஏற்படுத்தவில்லை என கூறினார்.

மேலும், தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருவதாகவும், தமிழக முதல்வர் 234 தொகுதிகளிலும் தேர்தல் பரைப்புரை மேற்கொள்வது போல் தேமுதிகவும் பரப்புரை மேற்கொள்ளும் என்றும், தொகுதி பங்கீடு குறித்து இருக்கட்சி தலைவர்கள் தான் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பார்கள் என்றும், இந்த முறை தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கேட்கப்படும் என்றும் கூறினார். மணப்பாறை தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் பாரதிதாசன், துணை செயலாளர்கள் வசந்த் பெரியசாமி, மூர்த்தி, வேல்முருகன், மணிதேவி, நகர செயலாளர் கோவிந்தராஜ், மணப்பாறை ஒன்றிய நிர்வாகிகள் சந்திரசேகர், குமார், செல்வேந்திரன், சிங்காரம், சின்னத்துரை, வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags : தேமுதிக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT