தமிழ்நாடு

பாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரர் காலமானார்

17th Jan 2021 07:51 PM

ADVERTISEMENT


பாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரர் சீனிவாசன் (74) ஞாயிற்றுக்கிழமை மதியம் திண்டிவனம் வகாப் நகரிலுள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு சந்திரசேகர் எனும் மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது இல்லத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று, மறைந்த தனது தம்பியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவருடன் பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சௌமியா மற்றும் முன்னாள் எம்பி தன்ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலரும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான பொன்முடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அசோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், திண்டிவனம் நகர செயலாளர் கபிலன் உட்பட திமுகவினர் உடன் சென்றனர்.

ADVERTISEMENT

மறைந்த சீனிவாசனின் உடல் திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில், சலவாதியில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramadoss
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT