தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை 19-ம் தேதி முதல் விலக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

17th Jan 2021 03:35 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வரும் 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT