தமிழ்நாடு

கமல் கூறுவது போலித்தனம்: அமைச்சர் பாண்டியராஜன் கடும் விமர்சனம்

17th Jan 2021 07:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல் கூறுவது போலித்தனம் என்று  அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

மநீம தலைவர் கமல் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘விஸ்வரூபம் பட விவகாரத்தின் போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது; எம்.ஜி.ஆர் இருந்திருந்தார் என்றால் எனக்கு அப்போது அந்த நிலை எற்பட்டிருக்காது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல் கூறுவது போலித்தனம் என்று  அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எம்ஜிஆர் இருந்திருந்தால் விஸ்வரூபம் படத்தின் போது பிரச்னை நேர்ந்திருக்காது என கமல் கூறுவது போலித்தனம்; கமல்ஹாசன் இப்படி கூறுவது அவர் முழு நேர அரசியலுக்கு வந்துவிட்டதை காட்டுகிறது. இப்படிக் கூறும் கமல் திரைத்துறையின் நிலையை திமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT