தமிழ்நாடு

சாத்தான்குளம் பகுதியில் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

17th Jan 2021 05:03 PM

ADVERTISEMENT


சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் ஒன்றிய அதிமுக சார்பில் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 104 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமை வகித்தார். நகர செயலாளர் குமரகுருபரன் ஒன்றிய சேர்மன் ஜெயபதி, மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவ பாண்டியன், ஊராட்சித் தலைவர்கள் பொன் முருகேசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அண்ணா கணேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னதுரை, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கார்த்தி சன் ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை முன்னாள் ஒன்றிய செயலாளர், ராஜ்மோகன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் ஜெயராணி, ஒன்றிய பாசறை துணைத் தலைவர் கண்ணன் மற்றும் சண்முகராஜ் சந்தன ராஜ் மருதமலை முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இதையடுத்து பொத்தகாலன்விளை தட்டார்மடம் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியதாழை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்ஜிஆர் இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன், துணை சேர்மன் அப்பாதுரை மாவட்ட மீனவரணி செயலர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : எம்.ஜி.ஆர். தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT