தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் தினம் அனுசரிப்பு

17th Jan 2021 01:21 PM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன்,ஒன்றியச் செயலாளர்கள் முத்தையா மயில்சாமி, நகரச் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேரடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ளஎம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ADVERTISEMENT

இதில் மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தனலட்சுமி முருகன், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி, மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT