தமிழ்நாடு

எம்ஜிஆர் பிறந்த நாள்: ஆத்தூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை 

17th Jan 2021 03:03 PM

ADVERTISEMENTசேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆத்தூர் நகர் அதிமுக அலுவலகத்தில் இருந்து சாரதா ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன் மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன் ஆத்தூர் நகர் செயலாளர் அ.மோகன் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சி.ரஞ்சித்குமார் க.ராமசாமி வி.பி.சேகர் ராஜா ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் இரா.தென்னரசு ஒன்றியக்குழுத்தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அ.சகாதேவன் டி.எம்.ராமலிங்கம் வி.முஸ்தபா ஜி.முரளிசாமி அவைத்தலைவர் பி.கலியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : MGR Birthday Attur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT