தமிழ்நாடு

தென்காசி பகுதியில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா

17th Jan 2021 11:31 AM

ADVERTISEMENT


தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி, மேலகரம். குற்றாலம், இலஞ்சி பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலர் சுடலை தலைமை வகித்தார். உச்சிமாகாளி முன்னிலை வகித்தார். மேலகரம்,குடியிருப்பு, நன்னகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலர் வழக்குரைஞர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். சார்பு அணி மாவட்ட செயலர்கள் நெல்லை முகிலன், சாந்தசீலன் முன்னிலை வகித்தனர்.

குற்றாலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலர் கணேஷ் தாமோதரன் தலைமை வகித்தார். இலஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயில் வேலன் தலைமை வகித்தார். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
 

Tags : MGR Birthday
ADVERTISEMENT
ADVERTISEMENT