தமிழ்நாடு

விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்: ராதாகிருஷ்ணன்

17th Jan 2021 04:07 PM

ADVERTISEMENT

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜன. 17) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பானவை என்று கூறினார்.

கரோனா தாக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. மக்களிடையே தடுப்பூசி தொடர்பாக உள்ள அச்சத்தை நீக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசிக்காக 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT