தமிழ்நாடு

அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் சில நாள்கள் ஓய்வு: கமல்

17th Jan 2021 10:06 PM

ADVERTISEMENT


காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சில நாள்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக் பாஸ் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதனிடையே முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தையும் அவர் முடித்துள்ளார்.

இந்த நிலையில், காலில் ஏற்கெனவே செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, மேலும் ஒரு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளதால் சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் பணிகளைத் தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

Tags : Kamal Hassan
ADVERTISEMENT
ADVERTISEMENT