தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா

17th Jan 2021 06:28 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 164 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,30,772 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 770 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,12,568 பேர் குணமடைந்துள்ளனர், 12,264 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

இன்றைய நிலவரப்படி 5,940 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT