தமிழ்நாடு

10, 12-ம் வகுப்புகளுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு: அரசு

17th Jan 2021 03:35 PM

ADVERTISEMENT

10  மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வரும் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே கல்வியாண்டு பாதிக்கு மேல் முடிந்துள்ளதால், மாணவர்களின் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 10  மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

50 சதவிகித பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் நாளை மறுநாள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட உள்ளன. 

அதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT