தமிழ்நாடு

போடியில் எம்.ஜி.ஆர். பிறந்த தினம்

17th Jan 2021 02:41 PM

ADVERTISEMENT


போடி: போடியில் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா போடி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

போடி நகர செயலாளர் பழனி ராஜ்  தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று போடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

போடி நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் எம்.ஜி.ஆரின் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொங்கல் வைத்தும் வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

போடி ஒன்றியம்  ராசிங்காபுரம்  சில்லமரத்துபட்டி மீனாட்சிபுரம், பொட்டல்களம், துரைராஜபுரம் காலணி,கோடாங்கிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சற்குணம் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி ஒன்றிய துணை செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ராசிங்காபுரம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT