தமிழ்நாடு

நீடாமங்கலம் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: திரளானோர் பங்கேற்பு

17th Jan 2021 02:55 PM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.ஆர்.ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர்(பொறுப்பு) ஆதி.ஜனகர், நகரசெயலாளர் இ.ஷாஜகான், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்றத்தலைவர் பொன்னுசாமி, நகர எம்ஜிஆர் மன்றத் தலைவர் பெரியதம்பி, கட்சி நிர்வாகிகள் ராமு,செந்தில்ராஜ், தாசுதீன்,சாமிநாதன், வீரையன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

நீடாமங்கலத்தில் நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அதிமுகவினர் வழங்கினர்.

இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியத்தில் கிராமங்களில் எம்ஜிஆர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதேபோல் நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கே.எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். பாஜக வடக்கு ஒன்றியத் தலைவர் எல்.ஜெயகுமார் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.குமார் வரவேற்றார்.

எம். ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்க்கு அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஒளிமதி ஆர்.சாமிநாதன் மாலை அணிவித்தார். டைலர் எஸ்.சண்முகம் தீபாராதனை காண்பித்தார். ஆலோசகர் டி.எஸ்.கே.நேரு பேசினார். இயக்க உறுப்பினர் சு.ராகவன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT