பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, அவரது 104-வது பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழை சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியல், பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
ADVERTISEMENT
அவர் முதல்வராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். எம்ஜிஆர் பிறந்தநாளில், அவருக்கு தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.