தமிழ்நாடு

எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள்: ஆத்தூரில் குதிரை ரேக்ளா பந்தயம் 

17th Jan 2021 02:35 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயத்தை சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறிய குதிரை ஆத்தூரில் இருந்து தளவாய்ப்பட்டி பிரிவு சாலை வரை 8 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. பெரிய குதிரைக்கான பந்தய தூரம் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்ப வேண்டும். வெற்றி பெற்ற பெரிய குதிரைக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிறிய குதிரைக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் இரா.தென்னரசு ராஜேஷ் உளாளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நிழ்ச்சியை ஆத்தூர் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.முரளிசாமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT