தமிழ்நாடு

ஜன.19 -இல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு

DIN

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனி, ஞாயிறு (ஜன.15. 16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்... சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிசிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT