தமிழ்நாடு

கோவையில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

DIN


கோவை: கோவையில் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவது முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்போசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி. கோவையில் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

 முதல் நபராக அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் வி.பூமா கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து  34 மருத்துவர்கள், 37 மருத்துவ மாணவர்கள் உள்பட 100 பேர் கரோனா தடுப்போசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT