தமிழ்நாடு

ஆண்டிபட்டி அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

16th Jan 2021 09:05 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே டி .அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் வெள்ளிக்கிழமை குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு ஆகியோருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நவீன் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு ,செல்வம் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் நவீனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். 

ADVERTISEMENT

இதனை தடுக்க முயன்ற நவீன் நண்பர்கள் ராஜா மற்றும் ஜெகதீஸ் ஆகிய இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபு , செல்வம், நேசமணி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் .மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT