தமிழ்நாடு

வைகை அணை முழு கொள்ளவை எட்டியது: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 

16th Jan 2021 08:37 AM

ADVERTISEMENT

வைகை அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 69 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3 ஆவது மற்றும் இறுதிகட்ட  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. 

வைகை அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 3925 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது.  இதனால், அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, ஆணையின் நீர்மட்டம்  69 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3 ஆவது மற்றும் இறுதிகட்ட  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையின் முழுக்கொள்ளளவான 71 அடிவரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியபோது கரையோர மக்களுக்கு முதல்வெள்ள அபாய எச்சரிக்கையும், வெள்ளிக்கிழமை இரவு அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தபோது இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT

வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது உபரியாக வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையின் முழுக்கொள்ளளவான 71 அடி வரையில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

Tags : vaigai dam reaches full capacity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT