தமிழ்நாடு

காவல் அதிகாரி அடித்ததில் சுருண்டு விழுந்த காளை உரிமையாளர்

DIN

காவல் துறையினர் தடியடி நடத்தியபோது காவல் அதிகாரி தாக்கியதில் தஞ்சையைச் சேர்ந்த காளை உரிமையாளர் சுருண்டு விழுந்து மயங்கினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெளியூர்களிலிருந்து காளைகளுடன் வியாழக்கிழமை இரவே வாடிவாசலுக்குள் வரும் பகுதியை முற்றுகையிட்டனர். ஏற்கெனவே அனுமதிச்சீட்டு பெற்றிருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாடிவாசலுக்குச் செல்ல காளைகள் அனுமதிக்கப்படும். ஆனால், நேற்றிரவே வந்த காளைகள் சோதனை செய்யாமல் வாடிவாசலுக்குள் அழைத்துவரப்பட்டன. 

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற தடியடி நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த காளை உரிமையாளர் பாலபாரதியின் தலையில், காவல் அதிகாரி ஒருவர் அடித்ததில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். மேலும் காளைகள் மிதித்ததில் காயமடைந்தார். பின்னர் அவர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT