தமிழ்நாடு

காணும் பெங்கலை முன்னிட்டு வைப்பூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

ஸ்ரீபெரும்புதூர்: வைப்பூர் ஊராட்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசந்தானம் பரிசு பொருள்கள் வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட வைப்பூர் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

இதையடுத்து பெண்களுக்கான  உரியடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக் சேர்  உள்ளிட்ட பல்வேறு  போட்டிகளும், ஆண்களுக்கு கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், உறியடித்தல், கயிறு இழுத்தல்,  வாலிபால் போட்டிகள்  ஆகிய  நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. 

இதில் வைப்பூர்  ஊராட்சிமன்ற  முன்னாள் தலைவர் வசந்திசந்தானம் கலந்துக்கொண்டு விளையாட்டு  போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT