தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது

16th Jan 2021 01:27 PM

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் கரோனா நோய்தடுப்பு தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் தொடங்கி வைத்தார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு முதல் முறையாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, வளவனூர் அருகே உள்ள சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

முதல்கட்டமாக பதிவு செய்துள்ள 10,688 பேருக்கு ஜனவரி 25ஆம் தேதி வரை தொடர்ந்து தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்டு ஒரு மணிநேரம் கண்காணிப்புக்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு 28 நாள்களுக்கு அடுத்த டோஸ் வழங்கப்படும்.

இந்த தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள நான்கு மையங்களிலும் ஒரு நாளைக்கு தலா 100 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Corona vaccination Villupuram district
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT