தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு: முதல்வர், துணைமுதல்வர் பெருமிதம்

16th Jan 2021 09:56 AM

ADVERTISEMENT

 

மதுரை: ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் பேசியது:

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகுத்து கொடுத்தது அதிமுக அரசு தான். சீறி வரும் காளைகள அடக்கும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நமது பாரம்பரியத்தை காக்க அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கான தடைகளையெல்லாம் தகரத்து எறிந்து தற்போது தொடர்ந்து சிறப்பாக நடைபெற அதிமுக அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது என்றார்.

முதல்வரும், துணை முதல்வரும் 1 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்து பார்த்தனர். அப்போது சிறந்த வீர்ர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள் பரிசு வழங்கினர்.

அமைச்சர்கள் சி.சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் எஸ் ராஜூ, சி.விஜயபாஸ்கர், எம்பி ப.ரவீந்திரநாத், ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Jallikkattu ADMK government
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT