தமிழ்நாடு

வேதாரண்யம்: பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் தின நிகழ்ச்சிகள்

15th Jan 2021 05:13 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில் திருவள்ளுவர் சிலைகளுக்கு இன்று (ஜன.15)மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேத்தாகுடி வடக்கு, அரக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், நாகை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர். கிரிதரன், ஊராட்சி மன்றத் தலைவர் விஐயா சோமசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினர் தருமலிங்கம், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வட்டாரச் செயலாளர் திருமாறன்,  தலைமை ஆசிரியர்கள் தொல்காப்பியன், திருமாவளவன்,மணிக்கண்ணன் மற்றும் வடிவேல் கோபிநாதன் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு புலவர் சின்னதுரை, நல்லாசிரியர் வைரக்கண்ணு, கவிஞர் புயல் குமார், சமூக ஆர்வலர் ஜி.கார்த்திகேயன், பள்ளி நிர்வாகி இளம்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, மருதூர், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT