தமிழ்நாடு

ராசிபுரம் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் நாள் விழா

15th Jan 2021 03:32 PM

ADVERTISEMENT

 

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திருவள்ளுவர் தினவிழாவை முன்னாள் மாணவர்கள் கொண்டாடினர்.

திருவள்ளவர் தினத்தை தொடர்ந்து ராசிபுரம்  திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் 32-வது  ஆண்டாக திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

இக்கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் நாளன்று ஆண்டுதோறும் விழா எடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை மாணவர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் சீ.மணிமேகலை தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், முன்னாள் மாணவர் சங்க செயலாளருமான முனைவர் இரா.சிவக்குமார் வரவேற்றார்.  கல்லூரி முன்னாள் மாணவரும், அண்ணாமலை பல்கலைக்கழக துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவருமான முனைவர் பி.சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். விழாவில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். மாணவர்களிடையே திருக்குறளின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் விளக்கிக்கூறப்பட்டது. 

விழாவில் வருங்காலங்களில் திருக்குறளின் நற்சிந்தனைகளையும் குறள் காட்டும் நெறிகளையும் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரப்பும் பல்வேறு செயல்பாடுகளை செய்ய உள்ளதாக மாணவர்கள் உறுதியேற்றனர். 

இதில் முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவரும், கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான பெ.துரைசாமி, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஆ.முத்துக்குமார், நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆய்வாளர் கை.பெரியசாமி, வழக்கறிஞர் சக்திவேல், தலைமையாசிரியர் வெ.சந்திரசேகரன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள்,  முன்னாள் மாணவர்கள், என்.சி.சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT