தமிழ்நாடு

சங்ககிரி: மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் பராம்பரிய பொங்கல் விழா

15th Jan 2021 07:33 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்திய பொங்கல் விழா சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் வி.ஜெனார்த்தனம் இவ்விழாவிற்கு தலைமை வகித்து பேசியதாவது,  பொங்கல் விழா, சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பராம்பரியமான கலைகளை தொடர்ந்து பாதுகாத்து அடுத்த தலைமுறையினரும் கற்றுக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்,  சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், வாசவிகிளப்,  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர்கள் இணைந்து தமிழர்கள் பண்பாட்டினை விளக்கும் வகையில் பராம்பரிய முறையில்  மூன்று மண்பானைகளில் பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனர். 

மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத்துறை அலுவலரும், சங்ககிரி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சி.செல்வம் ஆகியோர் பராம்பரியமான தப்பாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். 

ADVERTISEMENT

சங்ககிரி தனசேகரன் தலைமையில் தப்பாட்டமும்,  அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட பயிற்சியாளர் தங்கராஜ் தலைமையிலான மாணவ, மாணவிகள் சிலம்பாட்டமும், பள்ளி, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியமும் நடைபெற்றது.

மேலும் காவேரிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆல்வின் ராஜன் திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு புஷ்பாஞ்சலி நாட்டியம் ஆடினார்.  

இதில் சங்ககிரி அருகே உள்ள நட்டுவம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவன் சூரிய பிரகாஷ் ஒரு தடியில் தேநீர் குடிக்கும் கப்பில் குளிர்பானத்தை ஊற்றி ஒரு சொட்டு பானம் கூட சிந்தாமல் தடியை சூழற்றி விளையாடியது பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 

சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை மைதிலி, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், அரிமா சங்கங்களின் மண்டலத் தலைவர் சண்முகம், அரிமா சங்க செயலர் கார்த்தி, கோட்டை அரிமா சங்கத்தலைவர் சக்திவேல், செயலர் ரமேஷ், வாசவிகிளப் மண்டலத்தலைவர் ஆர்.கே.பத்ரிநாராயணன், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கல்வி சேவைக்குழுத்தலைவர் ஏ.வெங்கடேஸ்வர குப்தா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Selam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT