தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.26.52 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

15th Jan 2021 06:48 PM

ADVERTISEMENT

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.26.52 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இந்த நிலையில் துபைலிருந்து தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணியை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.‌ 

அப்போது அவரது உடலின் மலக்குடலில் இருந்து ரூ.26.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் எடையிலான தங்கத்தைக் கடத்தி வந்தது கடத்தப்பட்டது தெரிய வந்தது.

ADVERTISEMENT

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Gold Smuggling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT