தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் பொங்கல் விழா

15th Jan 2021 07:11 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்  மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூர் அடுத்த மேலப்பனங்காட்டாங்குடி தமிழர் தெருவில், அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது.

இப்பள்ளியில், 6 வயது முதல் 13 வயது வரையிலான மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உள்ளனர். இதே போல், சித்தாம்பூர் ஊராட்சி குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு பள்ளிகளிலும், நிறுவனர் ப.முருகையன் மற்றும் ஊழியர்கள் ஏற்பாட்டின் படி பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

பயிற்சிப் பள்ளியின் வளாகத்தில், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் பொங்கி, படையிலிட்டு சூரிய பகவானுக்குப் படைத்து வணங்கினர்.

ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் மகேஸ்வரி முருகைய்யன், பயிற்சியாளர்கள் சுரேஷ், அனுராதா, செளமியா, மகேஸ்வரி மற்றும் மேலாளர் வினோத் உள்ளிட்டோர் கவனித்தனர்.

Tags : Thiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT