தமிழ்நாடு

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

15th Jan 2021 11:35 AM

ADVERTISEMENT


சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: 

சிறந்த மாடுபிடி  வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வரவில்லை, அரசியலை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளனர்.

ADVERTISEMENT

அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் கரோனோ பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உள்பட்டு நடைபெற்று வருகிறது.

வரும் 30 ஆம் தேதி திருமங்கலம் அருகே டி குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டியுள்ள கோவிலை திறந்து வைக்க தமிழக முதல்வர் நேரில் வருகிறார் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT