தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் கர்னல் ஜான் பென்னி குயிக் பிறந்தநாள் விழா

15th Jan 2021 07:18 PM

ADVERTISEMENT


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கர்னல் ஜான் பென்னி குயிக்  பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக் முல்லை பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டினார்.

நூறு ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டிலுள்ள இந்த அணையால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி  பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அவருக்கு மரியாதை செய்யும் வகையில் பென்னி குயிக் பிறந்த நாளான இன்று உத்தமபாளையம் பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள் அரசியல்வாதிகள் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ADVERTISEMENT

அதில், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் துப்பாக்கி ரகுமத்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Tags : theni John Pennycuick
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT