தமிழ்நாடு

நேர்மையான வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம்: கமலஹாசன்

13th Jan 2021 03:06 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சாதி, மதங்களை கடந்து நேர்மைமிக்க வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: தொழில்துறை வளர்ச்சிக்காக ஏழு வாக்குறுதிகளை வடிவமைத்துள்ளோம்.

தொழில்துறை புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான அமைச்சரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாக்குறுதியில் இடம் பெறும்.

ADVERTISEMENT

சாதி, மதங்களை பார்க்காமல் நேர்மைமிக்க தகுதியான நபர்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். பொதுத்தொகுதிகளிலும் கூட தகுதியின் அடிப்படையில் எந்த சாதியினரும் வேட்பாளராக்கப்படலாம்.

எங்கள் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இடம் கூட கிடைக்காது என்ற அமைச்சர் கருப்பண்ணனின் கருத்தை அவரது பிரார்த்தனையாக மட்டுமே பார்க்கிறேன். எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது. கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன் என்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, 'அது தகவல் தான்' என பதிலளித்தார்.

வேளாண் சட்டத் திருத்தங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி. நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நாங்கள் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள் கிடையாது. மனித வளத்திற்கான முதலீடு. அரசுடன் தொடர்பில் இருக்க அவை உதவும். பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைது நடவடிக்கைகளை தாமதிக்கப்பட்ட நீதியாக பார்க்கிறோம் என்றார்.
 

Tags : கமல் kamal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT